பெரம்பலூர் மாவட்டம் களரம்பட்டி கிராமம் 2-வது வார்டு மேற்கு பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து நீண்ட நாட்களாக நீர் வீணாக வெளியேறி தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் செடி, கொடிகள் வளர்ந்து பாம்புகள் தங்கும் இடமாக மாறியுள்ளதால், நோய் பரவும் அபாயமும், பாம்புகள் தீண்டும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, பழுதடைந்த நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.