குடிநீர் தட்டுப்பாடு

Update: 2026-08-02 10:54 GMT

சிவகங்கை-திருப்பத்தூர் சாலை ஓ.புதூர் பஞ்சாயித்து அண்ணாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அன்றாட தேவைக்கு போதிய குடிநீர் இன்றி அவதியடைகின்றனர். மேலும் சிலர் பணம் கொடுத்து வெளியே குடிநீர் வாங்கி பயன்படுத்துகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதி மக்களுக்கு தடையின்றி குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்