ஆழ்துளை கிணறு அமைக்க கோரிக்கை

Update: 2026-08-02 13:15 GMT

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி நங்காஞ்சி ஆற்றின் ஓரத்தில் உள்ள வடக்குத் தெரு மற்றும் காமக்காபட்டி ரோடு ஆகிய 2 இடங்களில் உள்ள மயானங்களில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து காரியங்கள் செய்யும்போது தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். நங்காஞ்சி ஆற்றில் அதிகளவு சாக்கடை கழிவுநீர் செல்வதால் மழைக்காலங்களில் வரும் தண்ணீரையும் பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. எனவே, மேற்கண்ட 2 மயானங்களிலும் ஆழ்துளை கிணறு அமைத்துத் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்