புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பஸ் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் நிலையில், அங்கு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு குடிநீர் வசதி இல்லை. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் கடைகளிலும், உணவகங்களிலும் தண்ணீர் தேடி அலையும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும், வர்த்தக பயன்பாட்டுக்கே தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளதால் கடைக்காரர்களும் சிரமப்படுகின்றனர். எனவே, பயணிகளின் நலன்கருதி அறந்தாங்கி பஸ் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.