குடிநீர் குழாய் உடைப்பு

Update: 2026-10-04 06:45 GMT
சங்கராபுரம் அருகே ராவத்தநல்லூர் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு பல இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாகி வருவதால், பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. மேலும் அப்பகுதி மக்கள் குடிநீரை விலை கொடுத்து வாங்கி உபயோகிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்