ஏரியூர் பஸ் நிலையத்தில் தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்காகவும், அரசு அலுவலகங்களுக்காகவும், மருத்துவமனை, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட காரணங்களுக்காகவும் ஏராளமான பொதுமக்கள் ஏரியூர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பயணிகள், பொதுமக்களின் தேவைக்காக இங்கே குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் குடிநீர் என்ற பெயர் மட்டுமே இருக்கிறது. அதற்கான எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்