நிலக்கோட்டை தாலுகா அணைப்பட்டியில் சாலையோரத்தில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில், கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் வெளியேறி சாலையில் ஆறாக ஓடி வீணாகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே குழாய் உடைப்பை விரைந்து சீரமைக்க வேண்டும்.