குடிநீரின்றி பொதுமக்கள் அவதி

Update: 2026-06-07 17:33 GMT

திருச்சி கருமண்டபம், ஜெயநகர், ஆல்பா நகர், சக்தி நகர், பழைய பால்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக வினியோகிக்கப்படும் காவிரி தண்ணீர் கடந்த ஒரு வாரமாக வினியோகிக்கப்படவில்லை. இதனால் போதிய குடிநீர் இன்றி பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இப்பகுதி பொதுமக்களுக்கு சீரான முறையில் காவிரி குடிநீர் வினியோகிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்