குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2026-06-07 13:10 GMT

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து சுற்றுப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் ஆண்டிமடம் - ஜெயங்கொண்டம் சாலையில் நெல்லுமண்டி தெரு அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையில் ஆறு போல் ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுவதுடன், போதிய குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்