பர்கூர் ஒன்றியம் வரட்டனப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வரட்டனப்பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கடந்து சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் அமைக்கப்பட்டது. கடந்த 6 மாதங்களாக இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பழுதடைந்தது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் இப்பகுதி மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. எனவே காலதாமதம் இன்றி மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள பழுதை சரி செய்து தர வேண்டும்.