நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி வையப்பமலை ரோடு அரசு பள்ளி எதிரே வற்றாத நல்ல தண்ணீர் கிணறு ஒன்று இருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிலர் கிணற்றை மாசுபடுத்தி குப்பை போட்டு அந்த கிணற்றில் எரித்ததால், உள்ளூர் நிர்வாகம் கிணற்றை மூடிவிட்டனர். தற்போது வேலகவுண்டம்பட்டியில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே நல்ல தண்ணீர் கிடைக்க சம்பந்தப்பட்ட நிர்வாகம் மீண்டும் கிணற்றை உருவாக்கி மக்களின் தண்ணீர் தேவையை தீர்க்க வேண்டும்.