புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி இந்திரா நகரில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியை பள்ளி மாணவ, மாணவிகள் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த குடிநீர் தொட்டி கடந்த சில மாதங்களாக பயன்பாடில்லாமல் உள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் தங்களது தண்ணீர் தேவைக்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த குடிநீர் தொட்டியையும், அதனுடன் கூடிய ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டாரையும் சரிசெய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.