மழைநீர் அகற்றப்படுமா?

Update: 2022-07-13 16:56 GMT


ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சுவால்பேட்டை சுப்பராயன் தெருவில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த மழையால் மழைநீர் வெளியேறாமல் சாலையில் தேங்கி உள்ளது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்லும்போது வேகமாக வரும் வாகனங்கள் மழைநீரை வாரி இறைக்கும் சம்பவங்கள் தினம் தினம் நடக்கிறது. மேலும் தேங்கி இருக்கும் மழை நீரால் கொசுக்களும் உற்பத்தியாகி நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே, தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?.

- பாபு, அரக்கோணம்.

மேலும் செய்திகள்