ஓட்டப்பிடாரம் யூனியன் எஸ்.கைலாசபுரம் சாலையில் குடிநீர் குழாய் உடைந்து நீண்ட நாட்களாக தண்ணீர் சாலையில் குளம் போன்று தேங்குகிறது. இதனால் சாலை சேதமடைந்து உருக்குலைந்து காட்சி அளிக்கிறது. எனவே குழாய் உடைப்பை சரிசெய்து, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.