திருச்சி மலைக்கோட்டை 13-வது வார்டுக்குட்பட்ட வடக்கு உள்வீதி பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் கடந்த ஒரு வருடமாக காவிரி குடிநீர் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் குடிநீர், சமையல் உள்பட அடிப்படை தேவைகளுக்கு கூட தண்ணீரின்றி முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் உள்பட அமைத்து தரப்பு பொதுமக்களும் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இப்பகுதி பொதுமக்களுக்கு நிரந்தரமாக காவிரி குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.