காவேரிப்பாக்கம் வாசுகி நகரில் 200 குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். அவர்களுக்கு குடிநீர் வசதி கிடையாது. குடிநீர் இணைப்பும் வழங்கப்படவில்லை. பேரூராட்சி நிர்வாகத்தில் தெரிவித்தும் அதிகாரிகள் இன்னும் நடடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகமாவது நடவடிக்கை எடுத்து வாசுகி நகருக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும்.
-ராஜேந்திரன், காவேரிப்பாக்கம்.