ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்ன கம்பியம்பட்டு ஊராட்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடிநீர் இணைப்பு வழங்க தோண்டப்பட்ட பள்ளம் இதுவரை மூடவில்லை. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் குழந்தைகளும், முதியவர்கள் மிகவும் அவதிப்பட்டு செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உடனடியாக குடிநீர் குழாய் அமைத்து, தோண்டப்பட்ட பள்ளத்தை முறையாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மதன், ஜோலார்பேட்டை.