குடிநீர் தொட்டி பழுது

Update: 2025-01-26 18:52 GMT

அணைக்கட்டு தாலுகா பொய்கை ஊராட்சிக்கு உட்பட்ட புத்தர் நகர் பகுதியில் நீண்ட காலமாக சிறு மின் விசை குடிநீர் தொட்டி ஒன்று பழுதடைந்துள்ளது. குடிநீர் தொட்டியை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. குடத்தை வைத்து குடிநீர் பிடிக்க முறையான மேடை வசதி இல்லை. பழுதான குடிநீர் தொட்டியைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.பிரவீன், சமூக ஆர்வலர், பொய்கை.

மேலும் செய்திகள்