வீணாக செல்லும் குடிநீர்

Update: 2025-03-23 20:08 GMT

வேலூர் தொரப்பாடி அருகே பெரிய அல்லாபுரம் மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் செல்கிறது. அந்தக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி சாலையோரம் குட்டைபோல் தேங்கி நிற்கிறது. கோடைக்காலத்தில் குடிநீரின் தேவையை உணர்ந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடைந்த குடிநீர் குழாயை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாதவன், தொரப்பாடி.

மேலும் செய்திகள்