வீணாகும் குடிநீர்

Update: 2022-07-11 17:06 GMT


வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே சாலை ஓரம் குடிநீர் குழாய் செல்கிறது. அதில் குடிநீர் திறந்து விடுவதற்காக வால்வு பகுதி உள்ளது. அந்த வால்வு பகுதியில் இருந்து தண்ணீர் வெளியேறி சாலை ஓரம் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் அண்ணா சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வீணாகும் குடிநீரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜ்மோகன், வேலூர்.

மேலும் செய்திகள்