பயன்பாட்டுக்கு வராத குடிநீர் தொட்டி

Update: 2025-04-27 20:04 GMT

பள்ளிகொண்டா அருகே பள்ளிக்குப்பம் ஊராட்சியில் புத்தர்நகர், அண்ணா நகர், முள்ளிப்பாளையம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் 2018-19-ம் ஆண்டு ரூ.13 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. 2021-ம் ஆண்டு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ெபாதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வண்டும்.

-மணி, பள்ளிகொண்டா.

மேலும் செய்திகள்