குளத்தை சீரமைக்க வேண்டும்

Update: 2022-07-18 12:29 GMT


திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது தென்கரும்பலூர். அப்பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே பெரிய குளம் ஒன்று உள்ளது. அந்தக் குளத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மக்கள் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். தற்போது குளத்தை சரியான முறையில் பராமரிக்காததால் குளம் முழுவதும் மாசு அடைந்துள்ளது. சுற்றுச் சுவர்கள் இடிந்துள்ளது. சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு குளத்தை சீரமைக்க வேண்டும்.

-சிவக்குமார், தென்கரும்பலூர்.

மேலும் செய்திகள்