குடிநீர் கிணற்றை பராமரிக்க வேண்டும்

Update: 2022-09-03 09:11 GMT

திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மங்கலம் புதூர் கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்தக் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் அந்தப் பகுதியில் உள்ள பொதுக் கிணறு தண்ணீரை குடிநீராகப் பயன்படுத்தி வருகின்றனர். குடிநீருக்கு பயன்படுத்தப்படும் இந்தக் கிணறு முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளதால் தண்ணீர் பாசி மற்றும் குப்பைகள் கலந்து அசுத்தமாகக் காணப்படுகிறது. இதனால் பல்வேறு நோய் தொற்று ஏற்படும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே குடிநீருக்கு பயன்படுத்தப்படும் இந்தக் கிணற்றை பாதுகாக்கும் வகையில் குப்பைகள் விழாத வகையில் கிணற்றின் மேல் பகுதியில் மூடி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

-ராஜ், மங்கலம்.

மேலும் செய்திகள்