பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட படச்சேரி பாலம் அருகே ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். நீண்ட தொலைவுக்கு சென்று குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்துகின்றனர். அத்துடன் விலைக்கு வாங்கியும் பயன்படுத்துகின்றனர். இதனால் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே அந்த பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.