செங்கல்பட்டு மாவட்டம், கொளம்பாக்கம் 9-வது வார்டில் பாலாற்று கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. திடீரென கடந்த 6 மாதங்களாக இந்த திட்டத்தின் கீழ் இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படவில்லை. தற்போது, இதற்காக அமைக்கப்பட்ட குழாய் இணைப்புகளை பாலாற்று கூட்டுக் குடிநீர் நிர்வாகத்தினர் அடைத்துள்ளனர். இதனால் இங்கு வசதிக்கும் குடும்பத்தினர் குடிநீர் இல்லாமல் தவித்து கொண்டிருக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாாிகள் மீண்டும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.