திங்கள்நகர் அருகே மாங்குழி ஆற்றின் கரை பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏமான் குளம் உள்ளது. இந்த குளத்து தண்ணீரை அப்பகுதியில் உள்ள மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வந்தனர். மேலும், குளத்தை சுற்றியுள்ள ஏராளமான விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது. தற்போது இந்த குளம் முறையாக பராமரிக்காததால் செடிகள் வளர்ந்து புதர்மண்டி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.