தஞ்சாவூர் மாவட்டம் காவிரி ஆற்றில் இருந்து பூதலூர் தொடங்கி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை, ஆதனக்கோட்டை வழியாக ராமநாதபுரத்திற்கு கூட்டு குடிநீர் திட்டத்தில் குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் ஆதனக்கோட்டை முத்துமாரியம்மன் கோவில் அருகே செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி, கோவில் பகுதிகள் வாரச்சந்தை போடும் இடங்களுக்குள் சென்று தேங்குகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், கொசு உற்பத்தியாகி அப்பகுதி பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.