சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் 40 ஏரிகளில் தேக்கி வைக்கப்படுகிறது. அதில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான தலையாம்பள்ளம் ஏரியும் ஒன்றாகும். அந்த ஏரி சுமார் 80 ஹெக்டர் பரப்பளவு கொண்டது. சமீபத்தில் சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் முழுமையாக ஏரியில் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. அத்துடன் ஏரிக்கு தண்ணீா் செல்லும் கால்வாயை பொதுப்பணி துறை அதிகாரிகள் முறையாக தூர்வார வில்லை. எனவே அதிகாரிகள் ஏரியில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவா, தலையாம்பள்ளம்.