வந்தவாசியை அடுத்த பாதிரி கிராமத்தில் நீர் நிலை புறம்போக்கில் 8 சென்ட் அளவுக்கு ஒரு குளம் உள்ளது. அந்தக் குளத்தில் உள்ள நீரை மக்கள் பயன்படுத்தி வந்தனர். மேலும் கோடைக்காலத்தில் கால்நடைகளும் குடித்து தாகம் தீர்த்துக் கொண்டன. அந்தக் குளம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தற்போது குட்டையாக மாறி விட்டது. ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கிராம மக்கள் பலமுறை கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி மன்றம், வட்டார வளர்ச்சி அலுவலகம் போன்றவற்றில் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
-கிராம மக்கள், பாதிரி.