திறந்த நிலையில் இருக்கும் கிணறால் ஆபத்து

Update: 2022-09-04 13:18 GMT

திருவண்ணாமலை நகராட்சி பகுதிக்கு உட்பட்ட தாமரை நகர் சமுதாயக்கூடம் அருகில் மக்கள் நடைபாதை பகுதியில் சாலை ஓரத்தில் கிணறு ஒன்று உள்ளது. இந்தக் கிணறு திறந்த நிலையில் தரையை ஒட்டியபடி காணப்படுகிறது. இந்த வழியாக தினமும் ஏராளமான மக்கள் பகல் மற்றும் இரவில் நடந்து சென்று வருகின்றனர். அந்தக் கிணறு சுமார் 50 அடி ஆழத்துக்கு மேல் உள்ளதாகும். அந்தப் பகுதி வழியாக நடந்து செல்லும் மக்கள் எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே திறந்த நிலையில் இருக்கும் கிணற்றை கம்பி வேலி மூலம் மூடி அமைத்து, அதை மூடி வைக்க வேண்டும்.

-மணி, திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்