வாணாபுரம் அருகே உள்ள மெய்யூரில் வசிக்கும் பொதுமக்களின் நலன் கருதி சிறு மின்விசை தொட்டி அமைத்து, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. அந்தத் தொட்டிக்கு குடிநீர் ஏற்றும் ஆழ்துளை கிணற்றின் மின் மோட்டார் பழுதாகி பல மாதங்கள் ஆகிறது. அதை இன்னும் சீரமைக்கவில்லை. சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.
சிவா, மெய்யூர்