சீரான குடிநீர் தேவை

Update: 2026-01-25 07:39 GMT

உண்ணாமலைக்கடை பேரூராட்சிக்கு உட்பட்ட விரிகோடு பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இந்த பகுதியில் சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. மேலும், குடிநீர் வினியோகம் செய்யும்போது மிகவும் குறைவான நேரம் மட்டுமே வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாவதுடன், குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, அந்த பகுதிக்கு சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜாண்மோசஸ்,விரிகோடு.

மேலும் செய்திகள்