தேங்கி நிற்கும் தண்ணீர்

Update: 2026-01-25 10:12 GMT

பெரம்பலூர் வட்டம், செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குடிநீர் தொட்டியில் உள்ள தண்ணீரை பயன்படுத்தும் போது, வீணாகும் உபரிநீரானது முறையாக செல்ல வசதி ஏற்படுத்தப்படாமல் உள்ளதால் அதன் அருகில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் பெண்கள் இந்த தொட்டி தண்ணீரை பயன்படுத்த செல்லும்போது அவர்கள் நிலைத்தடுமாறி கீழே விழும் நிலையில் ஏற்பட்டு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்