கன்னியாகுமரி-கோவளம் நெடுஞ்சாலையில் சாலையின் இடது புறமாக சுமார் 50 மீட்டர் தூரத்தில் உபயோகமில்லாத ஒரு மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி உள்ளது. இந்த தொட்டியின் நான்கு தூண்களும் மிகவும் சேதமடைந்த பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் மனிதர்கள் அதன் அருகில் செல்லும்போது நீர்தேக்கதொட்டி இடிந்து விழுந்து உயிரிழப்பு ஏற்படம் அபாயம் உள்ளது. எனவே, அதிகாரிகள் அந்த நீர்தேக்க தொட்டியை இடித்து அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ், சந்தையடி.