திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் தங்களின் வாகனங்களை அம்மணி அம்மன் கோபுரம் அருகிலும், திருமஞ்சன கோபுரம் அருகிலும் நிறுத்திவிட்டு கோவிலுக்குள் செல்கின்றனர். இவ்வாறு வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் குடிநீருக்காக சில சமயங்களில் அவதி அடைகின்றனர். எனவே இதனை கருத்தில் கொண்டு கோவிலுக்கு வெளிப்புறத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைத்துத் தர வேண்டும்.
லிங்கம், திருவண்ணாமலை.