தேங்கியிருக்கும் மழை நீரால் நோயாளிகள் அவதி

Update: 2022-08-27 08:58 GMT

திருவண்ணாமலையை அடுத்த மங்கலத்தில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மழைநீர் வெளியேற முடியாமல் அங்கு தேங்கி காணப்படுகிறது. இதனால் அங்கு கொசு உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நோயால் சிகிச்சை பெற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் மக்களுக்கு தேங்கி கிடக்கும் மழை நீரால் சிரமம் ஏற்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தேங்கி இருக்கும் மழை நீரை அகற்ற வேண்டும்.

வெங்கடாசலம், திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்