சோளிங்கர் ஒன்றியம் தாளிக்கால் காலனியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் 250-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்தத் தொட்டியின் சிமெண்டு பூச்சு பெயர்ந்து சேதம் அடைந்துள்ளது. சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றி விட்டு புதிய தொட்டி கட்ட நடவடிக்கை எடுப்பார்களா?
-சுரேஷ், தாளிக்கால்.