திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அடிபம்பு பழுதடைந்த நிலையில் உள்ளது. இங்கு தினசரி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அவர்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட அடிபம்பு பழுதாகி இருப்பதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். எனவே அடிபம்பை நகராட்சி நிர்வாகம் சரிசெய்ய முன்வர வேண்டும்.
-மோகன், வாணியம்பாடி.