மூலனூர் அண்ணாநகர் பகுதியில், குடிநீர் வினியோகத்திற்காக சாலையோரம் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்த தொட்டி நீண்ட நாட்களாக மூடப்படாமல் திறந்த நிலையிலேயே உள்ளது. இரவு நேரங்களில் வெளிச்சம் குறைவாக இருக்கும்போது, இந்தத் தொட்டிக்குள் இருசக்கர வாகன ஓட்டிகள் விழ வாய்ப்பு உள்ளது. எனவே, மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக தொட்டியை மூடி விபத்துகளைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சார்லஸ், மூலனூர்.