பொதுமக்கள் அவதி

Update: 2026-02-22 14:39 GMT

கரூர் மாவட்டம் புஞ்சை கடம்பங்குறிச்சி ஊராட்சி பகுதியில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக ஆழ்குழாய் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. இந்நிலையில் குடிநீர் தொட்டிக்கு நீரேற்ற பயன்படும் மின்மோட்டார் பழுதாகி உள்ள நிலையில், கடந்த ஆறு மாத காலமாக குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் வரத்து இல்லை. இதனால் இப்பகுதி பொதுமக்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன்கருதி மின் மோட்டாரை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்