கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த எர்ரஅள்ளி ஊராட்சியில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள், முஜீப் நகர் பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.38 லட்சம் மதிப்பில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. இந்த நிலையில் குடிநீர் தொட்டியின் தூண்கள் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து விழுந்ததால் அந்த தொட்டியை இடித்து அகற்றினர். 10 மாதங்கள் ஆகியும் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். எனவே ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் தடையின்றி சீரான குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?