குடிநீர் தட்டுப்பாடு

Update: 2026-07-05 17:21 GMT
செஞ்சி அடுத்த நரசிங்கராயன்பேட்டை ஊராட்சியில் வானவில் மற்றும் வைரம் நகரில் குடிநீருக்காக குழாய்கள் பதிக்கப்பட்டு பல வருடங்கள் ஆகின்றன. ஆனால் இன்னும் குழாயில் தண்ணீர் வரவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் கடைகளில் பணம் கொடுத்து குடிநீர் வாங்கி பயன்படுத்த வேண்டிய அவல நிலை தொடர்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்