பென்னாகரம் அருகே உள்ள கரியம்பட்டியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கிணறு உள்ளது. இந்த கிணற்றில் இருந்து மின் மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து மினி டேங்க் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த கிணறு ஊரின் மையப்பகுதியில் திறந்தவெளியில் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. சிறுவர்கள் கிணற்றில் தவறி விழும் அபாயம் உள்ளது. உயிர் பலி ஏற்படும் முன்பு இந்த கிணற்றை சுற்றிலும் இரும்பு கம்பி வேலி அமைக்கலாமே!