புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி சந்தைப்பேட்டை ரேஷன் கடை முன் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பழுதடைந்து நீண்ட நாட்களாகிறது. மேலும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செல்லும் வழி மற்றும் என்.எஸ்.ஆர் மளிகை வளாகம் ஆகிய இரு இடங்களிலுள்ள நீர்த்தேக்கத் தொட்டிகளின் மின்மோட்டார்கள் பல மாதங்களாக பழுதடைந்து உள்ளன. இதனால் அவசர காலங்களில் நீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகப் பழுதுகளை நீக்கி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.