திறந்த வெளியில் குடிநீர் தொட்டி

Update: 2026-07-05 13:12 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்ட அள்ளி அடுத்த அத்திமுட்லு ஊராட்சிக்கு உட்பட்ட மையப் பகுதியில் மக்கள் பயன்பாட்டிற்காக குடிநீர் தொட்டி ஒன்று உள்ளது. இந்த குடிநீர் தொட்டி கடந்த சில மாதங்களாக கழிவுநீர் சூழ்ந்தநிலையில் சுகாதாரமின்றி திறந்த வெளியில் உள்ளது. இந்த குடிநீரை பயன்படுத்தினால் நோய் பரவும் அபாயம் ஏற்படலாம். இது பற்றி பலமுறை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுகாதாரமின்றி கிடக்கும் குடிநீர் தொட்டியை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்