புதுக்கோட்டை மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமான ஜீயபுரம் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் ஏற்பட்டுள்ள குழாய் உடைப்பு மற்றும் நீர்மட்டச் சரிவால் நகருக்குள் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் விநியோகிக்கப்படுவதால், பள்ளிச் செல்லும் குழந்தைகளை வைத்துள்ள பெற்றோர்கள் தண்ணீரின்றி அவதிப்படுவதோடு, காலிக்குடங்களுடன் நீண்ட தூரம் அலைய வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே வாரம் இருமுறையாவது தடையின்றி குடிநீர் வழங்கச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.