பராமரிக்கப்படாத குடிநீர் கிணறு

Update: 2026-07-05 13:39 GMT

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அம்பலமூலா அருகே உள்ள மதுவந்தால் பகுதியில் நம்பியார்குன்னு செல்லும் சாலையோரத்தில் குடிநீர் கிணறு பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் அந்த கிணற்று நீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே அந்த கிணற்றை பராமரிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்