பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இம்மக்களுக்கு வாணியாறு அணை பகுதியில் இருந்து கிணறு மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதுவும் முழுமையாக வழங்காததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. பேரூராட்சி பகுதிக்கு முழுமையாக குடிநீர் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.