குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

Update: 2026-07-05 13:27 GMT

நாமக்கல் மாவட்டம் நல்லூரில் ஏராளமான குடும்பங்கள் உள்ளன. இங்கு அப்பகுதி பொதுமக்களின் தேவைக்காக காவிரி ஆற்று குடிநீர் ஜேடர்பாளையத்தில் இருந்து கபிலர்மலை வழியாக நல்லூர் நீர்த்தேக்க தொட்டிக்கு வருகிறது. இந்தநிலையில் நல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே மெயின் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல ஆயிரம் லிட்டர் குடிநீர் தார்சாலையில் ஓடி வீணாகி வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைந்த குழாயை சீரமைத்து தண்ணீர் வீண் ஆகுவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்