உளுந்தூர்பேட்டை அடுத்த உடையானந்தல் கிராமத்தில் உள்ள மினி குடிநீர் தொட்டி 4 வருடங்களாக பழுதடைந்த நிலையில் காட்சிப்பொருளாகவே உள்ளது. மேலும் நாளுக்கு நாள் சுட்டெரித்து வரும் வெயிலால் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவை அதிகரித்துள்ளது. இதனால் குடிநீருக்காக வெகுதொலைவு செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.